Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியாவில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் கச்சதீவு பிரதான பேசுபொருளாகும். கச்சத்தீவு இலங்கைக்குரியது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாதென கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

புனித கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் நேற்று சனிக்கிழமை கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவின் ஒரு அடையாளமாக கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் காணப்படுகிறது. இலங்கை மற்றும் இந்திய மக்களின் புனித தலமாகவும் கச்சத்தீவு காணப்படுகிறது.

இந்தியாவில் ஏதேனும் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் அங்கு கச்சதீவு ஒரு பிரதான பேசுபொருளாக காணப்படும். இந்திய அரசியல்வாதிகளில் ஒருசிலர் தமது வாக்கு வங்கிக்காக கச்சதீவு பற்றி பேசுவார்கள். அதனூடாகவேனும் தமது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்த தீவை கைப்பற்ற போவதாக இந்திய அரசாங்கம் இதுவரை காலமும் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை. கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தானது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. கச்சதீவின் அடையாளத்தை இரு நாடுகளும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு