இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு ஏற்ப இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட வேண்டும்.
நமது நாட்டு மாணவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் கல்வி கற்கச் செல்கின்றார்கள். நமது நாட்டு மாணவர்களுக்குத் தேவையானவசதிகளையும் வாய்ப்புகளையும் இந்நாட்டில் வழங்காமல் இருப்பது அவர்களுக்கு நாம் இழைக்கும் அநீதி ஆகும்.எமது நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் பணியாற்றியவர்களே இங்கும் பணியாற்றுவார்கள். அவர்களுக்குக் குறைந்தபட்ச தகுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மருத்துவபீடங்களின் தரத்திற்கு அல்லது அதற்கு அப்பால் இன்னும் அதிக தரத்துடன் இந்த மருத்துவக் கல்லூரிகள் இருக்கவேண்டும் என்று ஒரு சட்டத்தை முன்மொழிந்துள்ளோம். மேலும், அந்தக் கல்லூரிகளுக்கு மூன்று மருத்துவமனைகளும் இணைக்கப்படவுள்ளன.உயர் கல்விக்காக ஒவ்வொருதுறைகளுக்கும் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். அதற்காக அரச வர்த்தமானி மூலம் குறைந்தபட்ச தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாட்டில் சுமார் 13 மருத்துவ பீடங்கள் உள்ளன. அதற்கு சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்படுகின்றார்கள். உண்மையில் நமது நாட்டு மாணவர் களின் அறிவு தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அடிப்ப டைத் தகுதிகளைக் கொண்ட மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.இந்தத்தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இணையும்மாண வர்களில், 10சதவீத மாணவர்களுக்கு கல்விப் புலமைப் பரி சில்களை வழங்குமாறும் இந்தப்பல்கலைக்கழகங்களிடம் தனிப்
பட்ட முறையில் கோரப்பட்டுள்ளன.
அடிப்படைத் தகுதிகள் இருந்தும், தொடர்ந்தும் மருத்துவப் படிப்பைத் தொடர முடியாத மாணவர்கள் இந்நாட்டில் உள்ளனர். எனவே அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தமது உயர் கல்வியைத் தொடர்ந்தால் அதற்கும் எமது நாட்டுப் பணமே செலவிடப்படுகின்றது. அதனால் குறைந்த பட்ச தகுதிகளைப் பெறும் மாணவர்களுக்கு எமது நாட்டிலேயே மருத்துவப் படிப்பைத் தொடரும் வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுகின்றது.என்றார்.