Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் பொது போக்குவரத்து முடங்கும்

எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் பொது போக்குவரத்து முடங்கும்

6 months ago
in செய்திகள்

பேருந்து சேவை முடங்காமல் இருக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் எரிபொருள் நிலையங்கள் ஊடாகத் தடையின்றி டீசல் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் உருவாகியுள்ள எரிபொருள் வரிசை தொடர்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இத்தருணத்தில் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள இப்போதே முறையான திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுப்பது அவசியம்.

குறிப்பாக, கடந்த காலங்களில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தப் பயன்படுத்தப்பட்ட கியூ.ஆர் (QR) முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். தற்போது நாட்டில் எவ்வித நெருக்கடியும் இல்லாத சூழலிலேயே எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறான நிலையில், உலகளாவிய ரீதியில் ஒரு பாரிய நெருக்கடி ஏற்படும்போது அதற்கு முகம் கொடுக்கக்கூடிய பலமான தலைமைத்துவம் நாட்டுக்கு அவசியம்.

எரிபொருள் விலை அதிகரிப்பைப் பொறுத்தவரை, அண்மையில் டிசல் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டாலும், பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. தற்போதைய இக்கட்டான சூழலில் மக்களை மேலதிகமாகப் பீதிக்குள்ளாக்கவோ அல்லது சுமையை ஏற்றவோ நாம் விரும்பவில்லை.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசைகள் உருவாகுமானால், தனியார் பேருந்துகள் மணித்தியாலக் கணக்கில் அல்லது நாட்கணக்கில் அந்த வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எவ்வாறாயினும், எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள் உருவாகுமானால் பொதுப் போக்குவரத்துச் சேவையை முன்னெடுத்துச் செல்வது கடினமாகும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி தயார்!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி தயார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு