ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வ கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
தமது நட்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறித்த நாடுகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.

இதற்கமைய, ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் தளங்களை அழிப்பதற்கான தற்காப்புத் தாக்குதல்களை (Defensive strikes) முன்னெடுக்கத் தாங்கள் தயாராக உள்ளதாகவும் அந்த நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.








