Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு “இன்பன்ட் வார்மர்” இயந்திரம் வழங்கிய நல்லுள்ளங்கள்

பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு “இன்பன்ட் வார்மர்” இயந்திரம் வழங்கிய நல்லுள்ளங்கள்

14 hours ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் தாய் சேய் பராமரிப்புப் பிரிவின் அத்தியாவசியத் தேவையான ‘இன்பன்ட் வார்மர்’ (Infant Warmer) இயந்திரம் நேற்று (10) வழங்கி வைக்கப்பட்டது.

சுமார் 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த மருத்துவ உபகரணம், கோவில் போரதீவைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிக்கும் பிரபல வர்த்தகருமான சமூக சேவையாளர் மார்க்கண்டு நேசராசா மற்றும் அவரது குடும்ப உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

பழுகாமம் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ‘மட்டக்களப்பு மற்றும் லண்டன் வைத்தியசாலை நண்பர்கள் வட்டம்’ அமைப்பிடம் பிருத்தானி கிளையிடம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைவாக, லண்டனில் தொழில்புரியும் வர்த்தகர் மார்க்கண்டு நேசராசா இக்கோரிக்கையினை ஏற்று நிதி உதவியினை வழங்கியதுடன் மட்டக்களப்பு மற்றும் இலண்டன் அமைப்பினர் இணைந்து குறித்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.

மருத்துவ உபகரணத்தைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில், மார்க்கண்டு நேசராசா அவர்களின் சகோதரரும் சமூக சேவையாளருமான திரு. மார்க்கண்டு பரநிருபசிங்கம் கலந்துகொண்டு இயந்திரத்தை வைத்தியசாலை அதிகாரிகளிடம் நேற்று (10.03.2026) ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் திரு.எஸ்.சிறிவித்தியன் ,மட்டக்களப்பு வைத்தியசாலை லண்டன் நண்பர்கள், மகப்பேற்று விசேடவைத்தியர் நிபுணர் திரு.எஸ்.கருணாகரன், உட்பட்ட பல வைத்தியர்கள் மற்றும் நிறுவனத்தின் உறுப்பினர்கள், போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்வரம் கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பழுகாமம் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சிற்றூழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டு நிலைமையை புரிந்து எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
செய்திகள்

நாட்டு நிலைமையை புரிந்து எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

March 11, 2026
ஈரானின் புதிய உச்ச ஆன்மீகத் தலைவர் மொஜ்தபா காமெனெய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?
உலக செய்திகள்

ஈரானின் புதிய உச்ச ஆன்மீகத் தலைவர் மொஜ்தபா காமெனெய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

March 11, 2026
சுவிட்சர்லாந்தில் பஸ் தீப்பற்றி எரிந்து விபத்து; 6 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பஸ் தீப்பற்றி எரிந்து விபத்து; 6 பேர் உயிரிழப்பு

March 11, 2026
மஞ்சள் எரிவாயுவின் விலையும் நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது
செய்திகள்

மஞ்சள் எரிவாயுவின் விலையும் நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

March 11, 2026
ஹார்முஸ் ஜலசந்தியில் தாய்லாந்து கப்பலை தாக்கிய அடையாளம் தெரியாத ஏவுகணை
உலக செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தியில் தாய்லாந்து கப்பலை தாக்கிய அடையாளம் தெரியாத ஏவுகணை

March 11, 2026
உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ என்ற பெருமையை பெறப்போகும் எலோன் மஸ்க்
உலக செய்திகள்

உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ என்ற பெருமையை பெறப்போகும் எலோன் மஸ்க்

March 11, 2026
Next Post
40% சம்பள உயர்வு கோரிக்கை – மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்; NTNSP தலைவர் எச்சரிக்கை

40% சம்பள உயர்வு கோரிக்கை - மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்; NTNSP தலைவர் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.