Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவின் போக்கு தொடர்ந்தால் இரும்பு மனிதர்கள் உலகை ஆக்கிரமிக்கக்கூடும்; அதிபயங்கர எச்சரிக்கை விடுத்த சீனா

அமெரிக்காவின் போக்கு தொடர்ந்தால் இரும்பு மனிதர்கள் உலகை ஆக்கிரமிக்கக்கூடும்; அதிபயங்கர எச்சரிக்கை விடுத்த சீனா

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானுடனான மோதலில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதாக அமெரிக்கா ஒப்புக்கொண்ட நிலையில் சீனா எச்சரிக்கை கடும் விடுத்துள்ளது.

ஈரானுக்கு எதிராக 12 நாட்களுக்கு மேலாக இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரானுடனான போரில் அமெரிக்க இராணுவம் பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக தரவுகளை விரைவாக ஆய்வு செய்ய இந்த AI தொழில்நுட்ப கருவிகள் உதவுவதாக அமெரிக்கா இராணுவ மத்திய கட்டளை(CENTCOM) தலைவர் பிராட் கூப்பர் தகவல் தெரிவித்துள்ளார்.

பல மணி நேரம் எடுக்கும் தரவு ஆய்வுகளை AI தொழில்நுட்ப கருவிகள் சில நிமிடங்களில் செய்து முடிப்பதால் எதிரிகளை விட வேகமான முடிவு எடுக்க இந்த AI தொழில்நுட்ப கருவிகள் உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இந்த AI தொழில்நுட்ப கருவிகள் தரவு ஆய்வுகளை மேற்கொண்டாலும், இலக்குகளை தாக்குவது தொடர்பான முடிவுகளை அமெரிக்க ராணுவ வீரர்களே எடுப்பார்கள் என்று CENTCOM தலைவர் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இராணுவ தளத்திற்கு பதிலாக பள்ளி மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 175 ஈரானிய சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

பழைய உளவு தகவல்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க இராணுவம் இது குறித்து உள் விசாரணை நடத்தி வருகிறது, அதே நேரத்தில் இந்த பழைய உளவு தகவல்களை AI தொழில்நுட்ப கருவிகள் வழங்கியதாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இராணுவ நடவடிக்கைகளில் கட்டுப்பாடற்ற AI தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவது குறித்து சீனா கடுமையான எச்சரிக்கையை முன்வைத்துள்ளது.

பிற நாடுகளின் இறையாண்மை மீது AI தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவது, மனித மரணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை அல்காரிதம்களிடம் கொடுப்பது ஆகியவை தார்மீக சிதைவு என்று சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜியாங் பின் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த போக்கு தொடர்ந்தால், டெர்மினேட்டர் திரைப்படத்தில் வருவது போல் தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு எதிராக திரும்பி உலகை அழிக்கும் சூழல் நிஜமாகி விடும் என்று எச்சரித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
தமிழரசு கட்சியால் எதிர்க்கப்படும் சட்டத்தை தனக்காக பயன்படுத்தும் சாணக்கியன்

தமிழரசு கட்சியால் எதிர்க்கப்படும் சட்டத்தை தனக்காக பயன்படுத்தும் சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.