Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று காலை முதல் எரிபொருள் பெற்றுக்கொள்ள QR குறியீடு அவசியம்; இலங்கையில் மீண்டும் நடைமுறை

இன்று காலை முதல் எரிபொருள் பெற்றுக்கொள்ள QR குறியீடு அவசியம்; இலங்கையில் மீண்டும் நடைமுறை

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (15) காலை 6 மணி முதல் QR குறியீடு உள்ளவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

QR இன்றி இனி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கையிருப்பிலுள்ள எரிபொருளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக, எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து வைக்கும் மாஃபியாக்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

அதன்படி, ஏற்கனவே பதிவு செய்தவர்கள், வாகன உரிமையாளர் விபரம் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் இல்லை எனில், https://fuelpass.gov.lk இணையத்தளத்தில் உங்கள் பழைய QR குறியீட்டைத் தரவிறக்கம் செய்யலாம்.

எனினும், வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருந்தால், இன்று காலை 6 மணி முதல் இணையதளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

புதிய வாகனங்கள் அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள் இன்று காலை 6 மணி முதல் https://fuelpass.gov.lk இணையத்தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில், ஒவ்வொரு வாகன வகைக்கும் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு தொடர்பிலும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், இன்று காலை முதல் அமுலுக்கு வரும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர QR நடைமுறையின் கீழ், ஒவ்வொரு வாகன வகைக்கும் வாராந்தம் ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருள் அளவும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பேருந்து 60 லீற்றர், மோட்டார் சைக்கிள், 5 லீற்றர், முச்சக்கர வண்டிகள் 15 லீற்றர், வேன் 40 லீற்றர், கார் 15 லீற்றர்

பாரவூர்தி 200 லீற்றர், விசேட தேவைக்கான வாகனங்கள், 40 லீற்றர் என்ற வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இன்று அதிகாலை முதல் மீண்டும் QR முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அனைத்து எரிபொருள் விநியோக நிலையங்களிலும் வரிசையில் நீண்ட நேரம் மக்கள் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
Next Post
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய ரெஜிபோம் போன்ற மர்மப்பொருள்

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய ரெஜிபோம் போன்ற மர்மப்பொருள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.