Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெற்றோரிடம் பணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு அதிபர்களுக்குப் பிரதமர் கடும் உத்தரவு!

பெற்றோரிடம் பணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு அதிபர்களுக்குப் பிரதமர் கடும் உத்தரவு!

6 months ago
in செய்திகள்

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோர்களுக்கு எவ்வித பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் எனவும், இதற்காகப் பெற்றோரிடம் நிதி வசூலிப்பதைத் தவிர்க்குமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிபர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான விழிப்புணர்வுச் சந்திப்பில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அத்துடன், வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை ஆரம்பப் பிரிவில் 25 – 30 வரையாகவும், இரண்டாம் நிலைப் பிரிவில் 35 வரையாகவும் மட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் சுற்றறிக்கைகளுக்குப் புறம்பாக மாணவர்களை இணைத்துக்கொள்ளக் கூடாது.

2026ஆம் ஆண்டில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் ‘ஸ்மார்ட் போர்ட்’ மற்றும் இணைய வசதிகள் வழங்கப்படும். இதற்காகப் பெற்றோரிடம் பணம் கோரக் கூடாது. 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துவதை அதிபர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கல்வித்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 23,000 ஆசிரியர்களைச் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் நடைபெறும்.

அதிபர் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது, அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தித் தமக்கு விருப்பமான இடங்களைப் பெற முற்படாமல், எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும்.

அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராயச் சம்பளக் குழுவிற்குப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிபர் சேவையின் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தகுதியுள்ளவர்கள் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்காமல் ஒரே பாடசாலையில் பிரதி அதிபர்களாகத் தொடர்வதை அனுமதிக்க முடியாது.

மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தேசிய மட்டத்திலான தீர்மானங்கள் வரும் வரை காத்திருக்காது, கோட்ட மற்றும் மாகாண மட்டத்திலேயே துரித தீர்வுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

September 19, 2026
திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!
செய்திகள்

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!

September 19, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

September 19, 2026
Next Post
ஈரான் மீது தாக்குதல் தொடரும் – இன்னும் ஆயிரக்கணக்கான இலக்குகள் உள்ளன; இஸ்ரேல் இராணுவம்

ஈரான் மீது தாக்குதல் தொடரும் - இன்னும் ஆயிரக்கணக்கான இலக்குகள் உள்ளன; இஸ்ரேல் இராணுவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.