Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“அநுர Fail” என்னும் தலைப்பில் சஜித் நடத்திய மக்கள் தெளிவூட்டல் நிகழ்வு!

“அநுர Fail” என்னும் தலைப்பில் சஜித் நடத்திய மக்கள் தெளிவூட்டல் நிகழ்வு!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, மக்களைப் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

பொரள்ளை மேகசின் வீதி விழா மண்டபத்தில் நடைபெற்ற “அநுர Fail” மக்கள் தெளிவூட்டல் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க, இப்போது கட்டணத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். “9000 ரூபா மின் கட்டணத்தை 6000 ரூபாவாகக் குறைப்பேன் என்று கூறி வாக்குகளைப் பெற்றவர்கள், இன்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்” என அவர் குறிப்பிட்டார்.

துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குவதாகக் கூறிய அரசாங்கம், தற்போது நான்கு வகையான வரிகளை விதித்து மக்களின் சுமையைக் கூட்டியுள்ளது. மத்திய கிழக்கு போரைக் காரணம் காட்டி தப்பிக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய அவர், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மீதான VAT உள்ளிட்ட வரிகளை நீக்கினால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றார்.

“கடந்த காலத்தில் விலை சூத்திரத்தை ஊழல் நிறைந்தது என்று விமர்சித்த திசைக்காட்டி அரசாங்கம், இன்று அதே சூத்திரத்தின் அடிமையாக மாறியுள்ளது. உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தாலும் இலங்கையில் அதன் பயன் மக்களுக்குக் கிடைப்பதில்லை. வரி மற்றும் கமிஷன்களை நீக்குவோம் என்று மேடைகளில் முழங்கியவர்கள் இன்று அனைத்தையும் மறந்துவிட்டனர்,” என அவர் சாடினார்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் சூழலில், அங்குள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை. கடந்த காலங்களில் ரணசிங்க பிரேமதாச இக்கட்டான சூழலில் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதை நினைவூட்டிய அவர், தற்போதைய அரசு எதிர்க்கட்சியின் ஆலோசனைகளைச் சமூக வலைத்தளங்களில் கேலி செய்வதில் மட்டுமே குறியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

September 19, 2026
Next Post
தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவைகள் மீளாரம்பம்; தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டது!

தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவைகள் மீளாரம்பம்; தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.