Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டை நிர்வகிக்க தெரியாவிட்டால் தமிழர் தேசத்தை தமிழர்களிடம் கையளியுங்கள்; பிரதேச சபை உறுப்பினர் கீதன்

நாட்டை நிர்வகிக்க தெரியாவிட்டால் தமிழர் தேசத்தை தமிழர்களிடம் கையளியுங்கள்; பிரதேச சபை உறுப்பினர் கீதன்

5 months ago
in செய்திகள்

நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிர்வாக சவால்களை சமாளிக்க முடியாமல் தள்ளாடும் அரச இயந்திரமே தற்போது காணப்படுகிறது.

அது பல்வேறு விடயங்கள் மூலமாக வெளிக்கொணரப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சந்திரகுமாரன் ஸ்டீவென்சன் (ச.கீதன்) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் எரிபொருள் முகாமைத்துவம் முறையாக செயற்படுத்தபடாமல் கடந்த அரசு கையாண்ட அதே வழிமுறையை பிரதி செய்து பயன்படுத்துவதிலும் இந்த அரசு தோல்வி கண்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத் துறையினருக்கு எரிபொருளை பகிர்ந்தளிக்க முடியாமல் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயல்பாட்டினை இந்த அரசு மேற்கொண்டு வருவதுடன் இன்னும் பல நிர்வாக குறைபாடுகளையும் நிவர்த்திக்க முடியாமல் தள்ளாடுகிறது.

ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் ஆட்சி ஏறிய அரசு பல்வேறு ஊழல்களுக்கு துணை போவதுடன் பாரிய ஊழல் மோசடிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக பொருத்தமற்ற சில கைதுகளை மேற்கொண்டு வருகிறது அத்தோடு தேர்தல் வாக்குறுதியில் மாகாண சபை தேர்தல்கள் நடாத்தப்படும் என உறுதி அளித்த இந்த அரசு தற்போது தங்கள் மக்கள் செல்வாக்கின் வீழ்ச்சியை கண்டு தேர்தல்களையும் இழுத்தடித்து வருகின்றனர்.

இவ்வாறு இந்த அரசு தொடர்ந்து இதே குறைபாட்டுடன் நாட்டை நிர்வகிக்க அனுமதிக்க முடியாது.

எனவே நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் தமிழர் தேசத்தை அங்கீகரித்து கடந்த காலத்தில் எவ்வாறு தமிழர்கள் தாங்கள் தங்கள் தேசத்தை நிர்வகித்தார்களோ அதுபோல மீண்டும் நிர்வகிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
Next Post
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட ஹவுதி அமைப்பினர்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட ஹவுதி அமைப்பினர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு