Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வறட்சியால் ஆறுகளில் நீர்மட்டம் குறைவு; ஆற்றுக்குள் ஊடுருவும் கடல் நீர்

வறட்சியால் ஆறுகளில் நீர்மட்டம் குறைவு; ஆற்றுக்குள் ஊடுருவும் கடல் நீர்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சி மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

களனி , களு மற்றும் நில்வளவை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், கடல் நீர் இந்த ஆறுகளுக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ளது.

இது குடிநீர் விநியோகக் கட்டமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தி, குடிநீர் விநியோகத்தைத் தடை செய்யக்கூடும் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஈர வலய மற்றும் உலர் வலய ஆறுகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது 73 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது.

தற்போதைய நீர் இருப்பு விவசாய நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக இருக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், சிறு போகச் செய்கைக்கு நீர் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நிலவும் வெப்பமான வானிலையினால் மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் நீர்மின் உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட வேண்டியுள்ளது.

குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். மின்சாரப் பயன்பாட்டையும் இயன்றளவு குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
“ஈரான் போர்நிறுத்தம் கோருகிறது”; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்!

"ஈரான் போர்நிறுத்தம் கோருகிறது"; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு