Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“கம்மன்பிலவின் நூல் ஒரு திட்டமிட்ட நாடகம்”; பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடும் சாடல்!

“கம்மன்பிலவின் நூல் ஒரு திட்டமிட்ட நாடகம்”; பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடும் சாடல்!

5 months ago
in செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள நூலானது ஒரு திட்டமிட்ட நாடகமாகும். இது கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்களை பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே தென்படுகின்றது என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது மக்கள் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளோ அழைக்கப்படாமை பாரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.

உண்மையாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அக்கறை இருந்திருந்தால் இந்த நூல் தொடர்பில் உரிய விசாரணை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு எவ்வித உத்தியோகபூர்வ தரப்பினரும் இன்றி இவ்வாறானதொரு நூலை வெளியிடுவது யாரைப் பாதுகாப்பதற்கான முயற்சி?

உதய கம்மன்பில என்பவர் இருவேறு நிலைப்பாடுகளைக் கொண்ட ஒரு நபர். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது வரிசையாக அமர்ந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களைக் கேட்பது வேடிக்கையாக உள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக விரல் நீட்டுவதை விடுத்து அன்றைய காலப்பகுதியில் ஏன் மௌனமாக இருந்தீர்கள்?

குறித்த நிகழ்வில் உரையாற்றப்பட்ட விடயங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சரியானவை அல்ல என்பதை உணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கிருந்து பாதியிலேயே வெளியேறியமையானது அவர் எடுத்த மிகச் சரியான தீர்மானமாகும்.

கம்மன்பில போன்றவர்களின் இத்தகைய செயற்பாடுகள் மக்களின் மனதை விகாரப்படுத்தி இனவாதத்தைத் தூண்டும் முயற்சியாகும். இவ்வாறான அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கி நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
மட்டக்களப்பில் சோகம்; வீதியைக் கடக்க முயன்ற 10 வயதுச் சிறுவன் விபத்தில் பலி!

மட்டக்களப்பில் சோகம்; வீதியைக் கடக்க முயன்ற 10 வயதுச் சிறுவன் விபத்தில் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு