Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஈரான் மீதான போர் வெற்றியை நெருங்கிவிட்டது”; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

“ஈரான் மீதான போர் வெற்றியை நெருங்கிவிட்டது”; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

5 months ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் இலக்குகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அமெரிக்கா வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட போர் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார்.

‘‘ஈரானுக்கு எதிரான போர் முடிவடையும் தருவாயில் உள்ளது. நாங்கள் இதை முடிக்கப் போகிறோம். மிக வேகமாக முடிக்கப் போகிறோம். நாங்கள் இலக்கை நெருங்கிவிட்டோம். ஈரான் ராணுவத்தை நசுக்க வேண்டும். ஈரானிய மதகுருமார்களின் அரசு பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு அளிக்கும் ஆதரவை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுக்க வேண்டும் ஆகிய நோக்கங்களுக்காகவே இந்த போரில் அமெரிக்கா இணைந்தது. இந்த முக்கிய நோக்கங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த நான்கு வாரங்களில் நமது ஆயுதப் படைகள் போர்க்களத்தில் விரைவான, தீர்க்கமான, மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளன. இதுபோன்ற வெற்றிகளை இதற்கு முன் மிகச் சிலரே கண்டிருக்கிறார்கள்.

ஈரானில் உள்ள அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுவிட்டனர். அடுத்த இரண்டு முதல் மூன்ற வாரங்களில் அவர்கள் இருக்க வேண்டிய கற்காலத்துக்கே அவர்களை திரும்ப அழைத்துச் செல்லப் போகிறோம். அமெரிக்க பேச்சுவார்த்தையில் ஈரான் தீர்வை எட்டாவிட்டால், அவர்களின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் நாங்கள் தாக்குவோம்.

எல்லா வாய்ப்புகளும் எங்களிடம் உள்ளன. அவர்களிடம் (ஈரானிடம்) எதுவும் இல்லை. அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் அரபு நாடுகள் காயப்படவோ அல்லது தோல்வியடையவோ நான் அனுமதிக்க மாட்டேன்’’ என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
Next Post
சமையல் எரிவாயு விலை திருத்தம்; எதிர்வரும் 5 ஆம் திகதி இறுதி முடிவு!

சமையல் எரிவாயு விலை திருத்தம்; எதிர்வரும் 5 ஆம் திகதி இறுதி முடிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு