இலஞ்சம், ஊழலை ஒழிக்க எத்தனை சட்டங்கள், திருத்தங்கள், நிறுவனங்கள் இருந்தாலும், இலஞ்சம், ஊழலை தடுக்கும் அதிகாரம் ஊழல் ஆட்சியாளர்கள் கையில் இருக்கும் வரை, ஊழல் தடுப்பு சட்டம் மற்றொரு சட்டமாகவே ஓரிடத்தில் இருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்திருந்தார்.
நாட்டில் இலஞ்சம், ஊழலை தடுக்க சட்டங்கள் இல்லாததால் அல்ல என்றும், அந்த சட்டங்களை அமுல்படுத்தும் அதிகாரம் படைத்த முதலாளிகள் ஊழல் செய்தால், இன்னும் எத்தனை சட்டங்கள், திருத்தங்கள் கொண்டு வந்தாலும், எந்த பயனும் இல்லை அவர்கள் அதைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்திற்கு சட்டங்களை இயற்றும் அதிகாரம் இருந்தாலும், சட்டங்களை அமுல்படுத்தும் அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்கள் ஊழல்வாதிகளாக இருந்தால், அவ்வாறான சட்டங்கள் நாட்டு மக்களுக்கு பயனற்றதாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.