Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிபிடிப்படையில் மட்டு மேற்கு வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிபிடிப்படையில் மட்டு மேற்கு வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் மிகவும் பின்தங்கிய வலயமாக கணிக்கப்படுகின்ற மட்டு.மேற்கு வலயம், நேற்று முன்தினம் (01) வெளியான உயர்தர பரீட்சை பெறுபேற்றில் கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்தது.

கிழக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டுக்கான GCE (A/L) பரீட்சையின் (முதல் மற்றும் இரண்டாம் முயற்சி) பெறுபேறு பகுப்பாய்வு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் வெளியிட்ட இந்த அறிக்கையின் படி, மொத்த மாகாணத் தேர்ச்சி வீதம் 66.32% ஆக பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டில் மாகாண மட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 74.56% தேர்ச்சி வீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மத்திய (74.46%) இரண்டாம் இடத்தையும், திருக்கோவில் (71.68%) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

அடுத்தடுத்த இடங்களில் மூதூர், பட்டிருப்பு, மற்றும் கல்முனை வலயங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மாணவர்கள் அதிக அளவில் பரீட்சையில் கலந்து கொண்ட வலயங்களில் கல்முனை 71.15% தேர்ச்சி வீதத்துடன் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

மற்றொரு பக்கம், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மகாஓயா, மற்றும் கிண்ணியா ஆகிய வலயங்களும் மாகாண சராசரியை விட மேம்பட்ட பெறுபேறுகளை பதிவு செய்துள்ளன.

மாகாண சராசரியை விட குறைவான பெறுபேறுகள் பெற்ற வலயங்களாக மட்டக்களப்பு, திருகோணமலை, கல்குடா, கந்தளாய், தெஹியட்டகண்டிய, அம்பாறை, மற்றும் திருகோணமலை வடக்கு ஆகியவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், திருகோணமலை வடக்கு 54.92% தேர்ச்சி வீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.

மொத்தமாக 18,070 மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றி, 11,984 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 1,573 மாணவர்கள் 3F பெறுபேறும், 558 மாணவர்கள் 3A சிறந்த பெறுபேறும் பெற்றுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
நாடு முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை; 18 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுப்பு!

நாடு முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை; 18 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை' விடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு