Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹட்டனில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்!

ஹட்டனில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்!

7 months ago
in செய்திகள்

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) சஃபாரி பேருந்து இன்று(06) முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இரத்தமலானை பணிமனையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த இந்த பழைய பேருந்து, ஹட்டன் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் 42 இருக்கைகளுடன் ரூ. 4 மில்லியன் செலவில் புதுப்பித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் மேல் கூரையுடன் மற்றும் வறண்ட காலத்தில் கூரையின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சஃபாரி பேருந்தில் ஒலி அமைப்பு, கவர்ச்சிகரமான மின்விளக்குகள் மற்றும் பல நவீன டிஜிட்டல் துணைக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த SLTB சஃபாரி பேருந்தை நுவரெலியா மாவட்டத்திற்குள் அல்லது வெளியே எந்தப் பயணத்திற்கும் SLTB கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம் என ஹட்டன் பணிமனை மேலாளர் திரு. பாலித வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தப் பேருந்திற்குத் தனி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடும் ஹட்டன் தொடருந்து நிலையத்திலிருந்து நல்லத்தண்ணி வரை நடைபெறும் 2026 – 2027 ஆம் ஆண்டு ஸ்ரீபாத மலை யாத்திரைக்கான சேவையிலும் இந்தப் பேருந்தை இணைக்க பணிமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சஃபாரி பேருந்து திறப்பு விழாவில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, நுவரெலியா மாவட்ட SLTB பிரதம மேலாளர் ஆர்.எம்.ஆர்.ஜே.பி. தசநாயக்க மற்றும் ஹட்டன் SLTB பணிமனையின் பல ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்
செய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்

October 20, 2026
இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

October 20, 2026
அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்
செய்திகள்

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்

October 20, 2026
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி

October 20, 2026
நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்
செய்திகள்

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்

October 20, 2026
ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!

October 20, 2026
Next Post
உலகளாவிய போர்ச்சூழல் மற்றும் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; எரிவாயு விலையின் உயர்வுக்கான பின்னணி!

உலகளாவிய போர்ச்சூழல் மற்றும் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; எரிவாயு விலையின் உயர்வுக்கான பின்னணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு