அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் எனப்படும் நீதி பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தான் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தியமை தொடர்பிலே குறித்த ரிட் எனப்படும் நீதி பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, அருட்தந்தை ரொஹான் சில்வா மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.








