Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கம்பளையைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் கிரகரி வாவியில் சடலமாக மீட்பு; கொலையா? உயிர்மாய்ப்பா?

கம்பளையைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் கிரகரி வாவியில் சடலமாக மீட்பு; கொலையா? உயிர்மாய்ப்பா?

5 months ago
in செய்திகள்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக நேற்று (06) திங்கட்கிழமை காலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை நகரை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் முஷாமின் எனவும் இவர் நீண்ட காலமாக நுவரெலியா நகரில் ஹோட்டல்களில் தொழில் புரிந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த நபரை காணவில்லை என சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களோடு தகவல் பரிமாறப்பட்டது

குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது அந்த நபரை எவராவது கொலை செய்து வாவியில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் கம்பளை உள்ள உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் இணைப்பு

நுவரெலியா கிரகரி வாவியில் அடையாளம்தெரியாத ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் இன்று (06) திங்கட்கிழமை காலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இமத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் உயிரிழப்பு கொலை அல்லது தற்கொலையா என்பது குறித்து பலகோணங்களில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
யாழில் இணுவில் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழில் இணுவில் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.