Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தாண்டு விளையாட்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு விளையாட்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவிப்பு

4 months ago
in செய்திகள்

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு விழாக்களை ஏற்பாடு செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிப்புறங்களில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளை காலை 10.00 மணிக்கு முன்னதாக நிறைவு செய்யுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விளையாட்டுத்துறை வைத்திய நிபுணர் ருவான் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் புத்தாண்டு விழாக்களில் மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம் உள்ளிட்ட பல வெளிப்புற விளையாட்டுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் நாளின் பொருத்தமான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

சூரிய ஒளியில் நேரடியாக நின்று விளையாடும் நிகழ்வுகளை காலை 10.00 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். மாலை நேர நிகழ்வுகளை 03.00 மணிக்கு பின்னர் ஆரம்பிக்க வேண்டும்.

அத்துடன், இவ்வாறான போட்டிகளில் பங்கேற்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். அதிகப்படியான களைப்பு அல்லது தசைப்பிடிப்பு ஏற்பட்டால், அது வெப்ப அதிகரிப்பின் அறிகுறியாகும்.

அத்தகைய நிலையில் உடனடியாக விளையாட்டிலிருந்து விலகி, நிழலான இடத்திற்குச் சென்று நீரைக் குடித்து உடல் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

விழா ஏற்பாட்டாளர்கள் விளையாட்டு மைதானங்களில் குளிர்ந்த நீர் மற்றும் ஐஸ் கட்டிகள் போன்ற முதலுதவி வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
Next Post
விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு

விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு