Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிர்ச்சியை ஏற்படுத்திய புத்தாண்டு தினத்தில் இரு கொலைகள்!

அதிர்ச்சியை ஏற்படுத்திய புத்தாண்டு தினத்தில் இரு கொலைகள்!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 32 வயதுடைய வெல்லவாய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவராவார்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை பயாகல பகுதியில் நபர் ஒருவர் தலையில் தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

பயாகல, விகாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று சித்திரை புத்தாண்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்தின் போது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இக்கொலை நடந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் அநுராதபுரம், நுவரவெவ குளத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரச இயந்திரம் இன்னும் முழுமையாக எமது கொள்கைகளுக்கு இணங்கவில்லை; அமைச்சர் லால் காந்த!
செய்திகள்

அரச இயந்திரம் இன்னும் முழுமையாக எமது கொள்கைகளுக்கு இணங்கவில்லை; அமைச்சர் லால் காந்த!

October 22, 2026
சவூதி விமான நிலையத்தின் மீது தாக்குதல்; ஒருவர் பலி, 8 பேர் காயம்!
உலக செய்திகள்

சவூதி விமான நிலையத்தின் மீது தாக்குதல்; ஒருவர் பலி, 8 பேர் காயம்!

October 22, 2026
மட்டு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்கியதில் 61 வயது விவசாயி உயிரிழப்பு
செய்திகள்

மட்டு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்கியதில் 61 வயது விவசாயி உயிரிழப்பு

October 22, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு

October 21, 2026
கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே
செய்திகள்

கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே

October 21, 2026
திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி
செய்திகள்

திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி

October 21, 2026
Next Post
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த ஆண்டுக்குள்ளேயே கிடைக்கவேண்டும்; சாணக்கியன்

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த ஆண்டுக்குள்ளேயே கிடைக்கவேண்டும்; சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு