Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த சோகம்; மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு

புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த சோகம்; மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர்.

இவர்களில் 35 வயதுடைய லக்சான் பேரரேரா என்பவர் மாத்திரமே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

24, 34 வயதுடைய மற்றைய இளைஞர்களின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப்பணி பணி முன்னெடுக்கப்பட்டபோது அதில் ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
சீனாவை ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க விடமாட்டோம்; அமெரிக்கா திட்டவட்டம்

சீனாவை ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க விடமாட்டோம்; அமெரிக்கா திட்டவட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு