Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை சுற்றுலா துறையின் ஊக்குவிப்பு முயற்சியில் மாற்றம்; LGBTQI முயற்சி நிறுத்தம்

இலங்கை சுற்றுலா துறையின் ஊக்குவிப்பு முயற்சியில் மாற்றம்; LGBTQI முயற்சி நிறுத்தம்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாற்றுப்பாலின மற்றும் பால்புதுமையின சுற்றுலாப்பயணிகள் (LGBTQI) இலங்கைக்கு வருகை தருவதை ஊக்குவிக்கும் வகையிலான முயற்சிக்கு வழங்கி வந்த ஆதரவை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை மற்றும் பால்புதுமையின சமூக உரிமைகள் அமைப்பான ஈக்குவல் கிரவுண்ட் என்பவற்றுடன் இணைந்து கடந்த செப்டெம்பர் மாதம் அரசாங்கம் இந்த முயற்சியை ஆரம்பித்தது.

அதனையடுத்து “எமது சுற்றுலா சந்தைகளை பன்முகப்படுத்துவதற்கும் , இலங்கையை அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும் இந்தத் திட்டம் பெரிதும் பங்களிப்புச் செய்யும்” என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் ஈக்குவல் கிரவுண்ட் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஸன்னா பிளாமர்-கால்டெராவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஏனைய கிறிஸ்தவ மற்றும் பௌத்த தலைவர்கள் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை அடுத்து கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் இந்த முயற்சிக்கான ஆதரவை இரத்துச்செய்திருப்பதாக அறிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் சில தினங்களுக்கு முன்னர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் ரோஸன்னா பிளாமர்-கால்டெரா, “இம்முயற்சிக்கான ஆதரவு இரத்து செய்யப்பட்டிருப்பது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “சுற்றுலாத் துறையினருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அவர்கள் எம்முடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவும் ஆர்வத்துடனும் இருக்கின்றனர். அது எமது சுற்றுலாத்துறைக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் எந்தளவு ஊக்கமளிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்” என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

October 25, 2026
கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!
செய்திகள்

கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!

October 25, 2026
மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!
செய்திகள்

மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!

October 25, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!
உலக செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!

October 25, 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி
செய்திகள்

பகிரங்க மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி

October 25, 2026
குளக்கரையில் மோட்டார் குண்டு; கிணற்றுக்குள் துப்பாக்கிப் பாகங்கள்!; திருக்கோவில் பொலிஸார் விசாரணை
செய்திகள்

குளக்கரையில் மோட்டார் குண்டு; கிணற்றுக்குள் துப்பாக்கிப் பாகங்கள்!; திருக்கோவில் பொலிஸார் விசாரணை

October 25, 2026
Next Post
பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் விடுதி நோயாளி கைது

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் விடுதி நோயாளி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு