Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று!

பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று!

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் மருத்துவமனை ஒன்றில், பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்​டார மருத்​து​வ​மனை உள்​ளது. இதில் ‘பிபிசி நியூஸ்’ நடத்​திய ஒரு ரகசிய ஆய்​வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்​டும் மீண்​டும் பயன்படுத்​துதல், ஒரே மருத்​துவ சாதனத்தை பல நோயாளி​களுக்கு பயன்​படுத்​துதல் என பல்​வேறு பாதுகாப்​பற்ற நடை​முறை​களை அம்​பலப்​படுத்​தி​யுள்​ளது.

இதுவே எச்​ஐவி பரவலுக்​கும் வழி​வகுத்​துள்​ள​தாக தெரிய​வந்​துள்​ளது. தவுன்​சா​வில் 8 வயது சிறு​வன் எச்​ஐவி தொற்று உறு​தி செய்​யப்​பட்ட சிறிது நேரத்​திலேயே உயி​ரிழந்​தான். இறுதி நாட்​களில், அவன் அனுப​வித்த தீவிர துன்​பத்தை சிறுவனின் தாயார் நினைவு கூர்ந்​தார்.

சிறு​வனுக்கு எச்ஐவி இருப்​பது கண்​டறியப்​பட்ட சிறிது காலத்​திலேயே, அவன் சகோ​தரி அஸ்​மாவுக்​கும் தொற்று இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இந்த மருத்​து​வ​மனை​யில் வழக்​க​மான சிகிச்​சை​யின் போது செலுத்​தப்​பட்ட அசுத்​த​மான ஊசிகள் மூலம் இரு குழந்​தைகளுக்​கும் வைரஸ் தொற்று ஏற்​பட்​ட​தாக அவர்களது குடும்​பத்​தினர் நம்​பு​கின்​றனர்.

கடந்த 2024-ம் ஆண்டின் பிற்​பகு​தி​யில், உள்​ளூர் மருத்​து​வர் குல் கைஸ் ரானி தனது மருத்​து​வ​மனைக்கு வரும் குழந்தைகளிடையே எச்​ஐவி பாதிப்​பு​கள் வழக்​கத்​துக்கு மாறாக அதி​கரித்​ததை கவனித்​த​போது இந்த தொற்​றுப் பரவல் முதன்​முதலில் வெளிச்​சத்​துக்கு வந்​தது.

பிபிசி நடத்​திய புல​னாய்​வில் 2024 நவம்​பர் முதல் 2025 அக்டோபர் வரையி​லான கால​கட்​டத்​தில், தவுன்​சா​வில் குறைந்​தது 331 குழந்​தைகளுக்கு எச்​ஐவி தொற்று இருப்பது கண்​டறியப்​பட்​டது.

இந்​தத் தொற்​றுகளில் பல பாது​காப்​பற்ற ஊசி போடும் முறை​களு​டன் தொடர்​புடைய​தாக இருக்​கலாம் என்று சான்​றுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை , தங்​கள் மீதான புகார்களை குறித்த மருத்​து​வ​மனை அதி​காரி​கள் மறுத்​துள்​ளதாகவும் கூறப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு

October 21, 2026
கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே
செய்திகள்

கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே

October 21, 2026
திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி
செய்திகள்

திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி

October 21, 2026
வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
Next Post
போர்ச் சூழல் தணிந்தவுடன் எரிபொருள் விலை குறைக்கப்படும்

போர்ச் சூழல் தணிந்தவுடன் எரிபொருள் விலை குறைக்கப்படும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.