Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்சி கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம்; சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள்

கட்சி கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம்; சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை
பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கற்பத்தை எடுக்க வேண்டும் என கட்சி நலன்
கருதியும் தமிழின நலன் கருதியும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர்
சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களுக்கு கட்சி
தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பில்,

1949இல் உருவாக்கப்பட்ட எமது முன்னோடிகளின் அர்ப்பணிப்புகள் மற்றும் அவர்களின் தியாகங்களினால்
இன்று வரை உயிர்ப்புடன் அரசியல் இலக்கு பற்றுடன் செயற்பட்டு வருகிற ஒரேயொரு கட்சியாக
செயற்பட்டு வருகிறது.

ஆரம்ப முதல் கட்சியை பிளவுபடுத்தி அழித்து விடும் முயற்சிகள் தொடர்ந்தாலும் அவற்றை எல்லாம்
ஒற்றுமையாக எதிர்த்து வெற்றி கண்டுள்ளோம். இலங்கைத் தமிழர்களின் இனத்துவ மற்றும் நிலத்துவ
உணர்வுகளை தளர்வின்றி முன்னெடுக்கும் தனித்துவமான ஒரேயொரு கட்சி நாங்கள்தான் என்பதை நாம்
அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

தென்னிலங்கை இனவாத அரசியலை எதிர்த்து தமிழின காப்பரணாக இருக்கும் எமது கட்சியை உடைத்து
சிதைத்து அழித்துவிட பலமான ஊடுருவல்கள் இடம் பெறுவதை நாம் பார்க்கிறோம்.

இந்த நிலையில் எமது கட்சி ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நேரம் இது என்பதை நீங்கள்
ஒவ்வொருவரும் அறிவீர்கள். அண்மைக் காலமாக எமது கட்சியின் உள்விவகாரங்கள் பொது வெளியில்
பேசப்பட்டு வருவது நமது எதிரிகளுக்கு வாய்பளிப்பதை நீங்கள் உணராதவர்கள் அல்ல என்பதை நான்
அறிவேன்.

எனவே இந்த சித்திரை புத்தாண்டில் இருந்து எமது கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை
பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கர்ப்பத்தை எடுக்க வேண்டும் என கட்சி நலன்
கருதியும் தமிழின நலன் கருதியும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன் – என்றுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்
காணொளிகள்

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

July 27, 2026
கொத்தொட்டுவை அருகே பேருந்து – முச்சக்கரவண்டி மோதல்; சாரதி உயிரிழப்பு, இருவர் காயம்
செய்திகள்

கொத்தொட்டுவை அருகே பேருந்து – முச்சக்கரவண்டி மோதல்; சாரதி உயிரிழப்பு, இருவர் காயம்

July 27, 2026
பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டும் மேக்ரான்
செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டும் மேக்ரான்

July 27, 2026
கறுப்பு ஜூலை நினைவேந்தல்; லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகரகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கறுப்பு ஜூலை நினைவேந்தல்; லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகரகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம்!

July 27, 2026
கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் ஹெரோயினுடன் பிக்கு கைது!
செய்திகள்

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் ஹெரோயினுடன் பிக்கு கைது!

July 27, 2026
ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

July 27, 2026
Next Post
நாட்டில் விவாகரத்து செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் விவாகரத்து செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு