விவாகரத்து செய்பவர்களின் தொகை அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்களில் தெரியவந்துள்ளது. திருமண பந்தத்திலிருந்து விடுபடுவதில், ஆண் மற்றும் பெண் ஆகிய இரு தரப்பினரும் ஆர்வம் செலுத்தி வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல்,இத்தொகை உயர்வடைந்துள்ளது.இது தவிர,
முறையான விவாகரத்தின்றி சட்டவிரோதமான முறையில் பிரிந்து வாழ்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு 10,000 பேருக்கும் சட்டவிரோதமாகப் பிரிந்து வாழும் ஆண்களின் எண்ணிக்கை 79 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 112 ஆகவும் உயர்வடைந்துள்ளது.








