Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி கடலில் ஆட்கள் இல்லாமல் மிதந்து வந்த வெளிநாட்டு படகு மீட்பு

காத்தான்குடி கடலில் ஆட்கள் இல்லாமல் மிதந்து வந்த வெளிநாட்டு படகு மீட்பு

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் நடுக்கடலில் அநாதரவாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியப் படகு ஒன்றை, காத்தான்குடி மீனவர்கள் இன்று (20) நண்பகல் கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.

கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்தப் படகு பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டது.

மீட்கப்பட்ட குறித்த படகில் “கல்கத்தா விளையாட்டுக் கழகம்” (Calcutta Sports Club) எனப் பொறிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்தப் பிரதேசக் கடல் பகுதியில் இதுவரை காலமும் இவ்வாறானதொரு படகு தத்தளித்த நிலையில் கண்டெடுக்கப்படவில்லை எனவும், இதுவே முதல் தடவை எனவும் பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

படகைச் செலுத்துவதற்கு எவருமின்றி, இயந்திரமும் இல்லாத நிலையில் நடுக்கடலில் படகு தத்தளிப்பதாகக் காத்தான்குடி மீனவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கடற்படை மற்றும் இராணுவத்தினரின் அனுமதியைப் பெற்ற மீனவர்கள், படகுகள் மூலம் நடுக்கடலுக்குச் சென்று, குறித்த படகைக் கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.

சுமார் 18 அடி நீளம் கொண்ட இந்தப் படகு, தற்போது மேலதிக விசாரணைகளுக்காக இராணுவம் மற்றும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துக் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பிணையில் விடுதலை

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பிணையில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு