Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று காலை வேளையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன்படி, தேவாலயங்களில் மணி ஒலி எழுப்புதல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், மெழுகுவர்த்தி அல்லது தேங்காய் எண்ணெய் விளக்கேற்றுதல் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகள் இன்று காலை இடம்பெறவுள்ளன.

இதேவேளை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக அந்த தேவாலயத்தைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இன்று காலை 7.00 மணி முதல் ஆராதனைகள் நிறைவடையும் வரை தேவாலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

மேலும், கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலும் விசேட ஆராதனை நடைபெறவுள்ளது.

இதனிடையே, ஆயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘பிரார்த்தனை நடைபவனி’ இன்று மாலை 4.00 மணிக்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா மைதானத்தில் ஆரம்பமாகி, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!

October 22, 2026
தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

October 22, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!

October 22, 2026
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் அச்சம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!
உலக செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் அச்சம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

October 22, 2026
ஞானசார தேரரின் காவி ஆடை விவகாரம்; மனுக்கள் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் காவி ஆடை விவகாரம்; மனுக்கள் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

October 22, 2026
மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

October 22, 2026
Next Post
ஈரானுடனான உடன்பாடு எட்டப்படும் வரை துறைமுக முற்றுகை நீக்கப்படாது!

ஈரானுடனான உடன்பாடு எட்டப்படும் வரை துறைமுக முற்றுகை நீக்கப்படாது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு