Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
323 கொள்கலன்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழு இன்றும் கூடுகிறது!

323 கொள்கலன்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழு இன்றும் கூடுகிறது!

6 months ago
in செய்திகள்

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் வெளியேற்றப்பட்டமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அதற்கான பரிந்துரைகளை முன்வைக்கவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் சாட்சிகளை அழைப்பதற்கான யோசனை ஒன்றை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.

அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறித்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் துறைமுகங்கள் அமைச்சராகப் பணியாற்றிய பிமல் ரத்நாயக்க ஆகியோரை சாட்சியமளிக்க அழைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

மேலதிகமாக, அக்காலப்பகுதியில் துறைமுகங்கள் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய ஜனித ருவன் கொடிதுவக்கு மற்றும் அப்போதைய நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான் மற்றும் டி.வி. சானக்க ஆகியோரின் கையொப்பத்துடன் கூடிய இந்த கடிதம், குழுவின் தலைவரான நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் கூடவுள்ள இக்குழுவின் கூட்டத்தின் போது, குறித்த சாட்சியாளர்களை அழைப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா “அத தெரண”விற்குத் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!
செய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

October 22, 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

October 22, 2026
போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!
உலக செய்திகள்

போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!

October 22, 2026
நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!

October 22, 2026
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

October 22, 2026
ஞானசார தேரருக்கு ஆதரவாக இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் கத்தியுடன் நடமாடிய நபர் கைது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு ஆதரவாக இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் கத்தியுடன் நடமாடிய நபர் கைது!

October 22, 2026
Next Post
சுரேஷ் சலே பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்!

சுரேஷ் சலே பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு