Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் யாழ் இளைஞர் உயிரிழப்பு; பொலிஸாரின் அலட்சியமே காரணமா? – பெரும் சர்ச்சை

கனடாவில் யாழ் இளைஞர் உயிரிழப்பு; பொலிஸாரின் அலட்சியமே காரணமா? – பெரும் சர்ச்சை

5 months ago
in செய்திகள்

கனடாவின் பிரம்ப்டன் (Brampton) நகரில் வீதியில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கனேடிய பொலிஸார் காட்டிய அலட்சியமே உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் எனப் பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்தவரும், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான 30 வயதுடைய றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி மாலை Queen Street மற்றும் Kennedy Road சந்திப்பிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

மயங்கி விழுந்ததைக் கண்ட பேருந்து சாரதி வழங்கிய தகவலின் பேரில் அங்கு வந்த பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police), மயக்க நிலையில் இருந்த கெனடியை விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறாகக் கருதிய பொலிஸார், அவருக்கு அபராதச் சீட்டு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறான தகவல் வழங்கப்பட்டதால் முறையான அவசர சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனையில் கெனடியின் உடலில் மதுவின் தாக்கம் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாகவே (Brain Hemorrhage) அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், நீண்ட நேரத் தாமதத்தின் பின் வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மரணத்திற்கு முன் உடல் உறுப்புத் தானத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த கெனடி, தனது மறைவின் ஊடாக ஆறு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்டத் தகவல் தவறானது என்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியதை அடுத்து, தாம் வழங்கிய அபராதம் தவறானது எனப் பீல் பிராந்திய பொலிஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தற்போது உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மூன்று வாரங்களுக்கு முன்பே கனடிய பிரஜாவுரிமை பெற்றிருந்த கெனடி, நீண்ட நாட்களுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயார் மற்றும் உறவினர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். தற்போது அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலும், தாயாரைக் கனடாவுக்கு அழைத்து வருவதிலும் ஆவணச் சிக்கல்கள் நிலவி வருவதாக தெரியவருகின்றது.

சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால் ஓர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கும் கனடியத் தமிழ் சமூகத்தினர், இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

September 18, 2026
“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”
அரசியல்

“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”

September 18, 2026
இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!
செய்திகள்

இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

September 18, 2026
புகையிரத பொது முகாமையாளர் நீக்கம் கோரி தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!
செய்திகள்

புகையிரத பொது முகாமையாளர் நீக்கம் கோரி தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

September 18, 2026
Next Post
42 இலட்சம் ரூபாய் பெறுமதியான சீன சிகரெட்டுகள் பறிமுதல்!

42 இலட்சம் ரூபாய் பெறுமதியான சீன சிகரெட்டுகள் பறிமுதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.