Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடலுக்கடியில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அடர்ந்த காடு; மனித நாகரிகம் வாழ்ந்திருக்கலாம் என சந்தேகம்

கடலுக்கடியில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அடர்ந்த காடு; மனித நாகரிகம் வாழ்ந்திருக்கலாம் என சந்தேகம்

5 months ago
in உலக செய்திகள், செய்திகள்

ஐரோப்பாவையும் பிரிட்டனையும் இணைக்கும் வடகடல் (North Sea) பகுதிக்கு அடியில், சுமார் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அடர்ந்த காடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளையே பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டோகர்லாந்து’ (Doggerland) என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில், சுமார் 16,000 ஆண்டுகளுக்கு முன்பே ஓக் (Oak) மற்றும் எல்ம் (Elm) போன்ற வலிமையான மரங்கள் நிறைந்த காடுகள் இருந்ததை வார்விக் பல்கலைக்கழக (University of Warwick) விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சாதாரணமாக மரங்கள் புதைபடிவமாக மாறுவது அரிது. ஆனால், கடற்பரப்பிற்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண்ணில் தங்கியிருந்த மரபணுக்களை (sedaDNA) ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது இந்த மர்மம் விலகியுள்ளது.

சுமார் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட சில விசித்திரமான மரங்களின் டிஎன்ஏ எச்சங்களும் அங்கு கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த பனிக்காலத்தின் முடிவில் கடல் மட்டம் உயர்ந்தபோது, இந்த அடர்ந்த காடுகளும் அங்கே வாழ்ந்த உயிரினங்களும் அப்படியே கடலுக்குள் மூழ்கியுள்ளன.

இது வெறும் ஒரு நிலப்பாலம் மட்டுமல்ல, ஒரு காலத்தின் நாகரிக மையமாகவே இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நிலப்பரப்பை டிஜிட்டல் முறையில் மீள் உருவாக்கம் செய்து பார்த்தபோது, அங்கு ஆறுகள், ஏரிகள் மற்றும் பசுமையான காடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

பூமியின் காலநிலை மாற்றங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதற்கு இந்த ‘டோகர்லாந்து’ ஒரு சான்றாகும். இந்நிலையில் கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் இதுபோன்ற இன்னும் பல மர்மங்கள் எதிர்காலத்தில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
Next Post
பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கை நிராகரிப்பு; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கை நிராகரிப்பு; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு