Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ விண்கல் மழை; தெளிவான கிழக்கு வானில் பார்க்க முடியும்

‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ விண்கல் மழை; தெளிவான கிழக்கு வானில் பார்க்க முடியும்

4 months ago
in செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற ‘ஹேலி வால்நட்சத்திரம்’ விண்வெளியில் விட்டுச் சென்ற துகள்கள் வழியாக பூமி கடந்து செல்லும் போது இந்த விண்கல் மழை ஏற்படுகிறது.

இந்தத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது உராய்வினால் எரிந்து, வானில் பிரகாசமான ஒளிக்கோடுகளாகத் தோன்றும்.

இந்த விண்கல் மழை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 27 ஆம் திகதி வரை நீடித்தாலும், மே 6-ஆம் திகதி அதிகாலை வேளையிலேயே அதிகப்படியான விண்கற்களைக் காண முடியும்.

மே 6-ஆம் திகதி அதிகாலை 2:00 மணிக்கு மேல், கிழக்குத் திசை வானத்தை நோக்கிப் பார்ப்பது சிறந்தது.

வானம் தெளிவாகவும் வெளிச்சம் குறைவாகவும் இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 40 முதல் 85 விண்கற்கள் வரை தென்பட வாய்ப்புள்ளது.

இந்த விண்கற்கள் அக்குவாரியஸ் விண்மீன் கூட்டத்திலிருந்து உருவாவது போன்ற தோற்றத்தை அளிக்கும். இதனால் இதற்கு ‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

வானியல் நிபுணர்கள் கருத்துப்படி, இந்நிகழ்வை வெற்றுக் கண்ணாலேயே பார்க்கலாம். இதற்கு எவ்விதத் தொலைநோக்கிகளும் தேவையில்லை. ஒளி மாசற்ற இருட்டான இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.உயரமான கட்டிடங்கள் இல்லாத வெட்டவெளியான இடத்திலிருந்து கிழக்குத் திசை வானத்தை உற்று நோக்கி பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
கள்ள நோட்டுகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஏழு சந்தேக நபர்கள் கைது

கள்ள நோட்டுகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஏழு சந்தேக நபர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு