Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களில் திடீர் சோதனை; 4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களில் திடீர் சோதனை; 4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள, சகல உணவகங்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் காரைதீவு மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரிகளின் வழிகாட்டலில் (24) காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையில், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட நிந்தவூர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, உணவகங்களின் சமையலறைகள், களஞ்சிய அறைகள் மற்றும் உணவு தயாரிக்கப்படும், பரிமாறப்படும் இடங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. இதன்போது சுகாதார சீர்கேடான முறையில் உணவுப் பொருட்களைக் கையாளுதல், பழைய எண்ணெயைப் பயன்படுத்துதல், மற்றும் சமைப்பதற்குப் பொருத்தமற்ற பிளாஸ்டிக் பாத்திரங்கள், துருப்பிடித்த இரும்புத் தட்டுகள் (rusty iron trays) போன்றவற்றில் உணவுகளைத் தயாரித்தல் கண்டறியப்பட்டது. அத்துடன் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட பெருமளவிலான உணவுகளும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இதேவேளை சுகாதார விதிகளை மீறி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட 04 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள், உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதிய பஸ் ; CTB சாரதி தப்பியோட்டம்

தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதிய பஸ் ; CTB சாரதி தப்பியோட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.