களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் பழுதடைந்த நிலையிலும் உரிய வெப்பநிலை கையாளப்படாத சுகாதாரத்துக்கு முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டு உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட ஜோக்கெட், மற்றும் குடிபான போத்தல்களை பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் த.கஜனன் அவர்களினால் கைப்பற்றப்பட்டதுடன் விற்பனைக்காக கொண்டுவந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த விற்பனையாளரி்டமிருந்து 448 நியூடெல் ஜோக்கெட்களும் 143 குடிபான பால் போத்தல்களும் கைப்பற்றப்படன.

இவை அனைத்தும் உணவுகளை கையாளும் உணவகங்களுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் சுகாதார பரிசோதகரால் மேற் கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது பழுதடைந்த நிலையிலும் உரிய வெப்பநிலை கையாளப்படாத நிலையிலும் சுகாதாரத்துக்கு முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டு வண்டி மூலம் கொண்டுவரப்பட்ட விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்படி பொருட்களை பொதுச் சுகாதார பரிசோதகரினால் கைப்பற்றியதுடன் உடன் அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துடன் மேற்படி முறைகேடான முறையில் களஞ்சியப்படுத்தி விற்பனைக்கு கொண்டுவந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.








