Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல், கத்தார், குவைத் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஆயுதங்களை விற்க ட்ரம்ப் ஒப்புதல்

இஸ்ரேல், கத்தார், குவைத் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஆயுதங்களை விற்க ட்ரம்ப் ஒப்புதல்

1 month ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேல், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகம், மத்திய கிழக்கு நட்பு நாடுகளான இஸ்ரேல், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு மொத்தம் 8.6 பில்லியன் டாலருக்கும் அதிகமான இராணுவ தடவாளங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு நட்பு நாடுகளுக்கு உடனடியாகப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய அவசரநிலை நிலவுவதை கணக்கில் கொண்டு, இந்த விற்பனைக்கான நாடாளுமன்ற ஆய்வுகளுக்கு விலக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக, கத்தாருக்கு 4.01 பில்லியன் டாலர் மதிப்பிலான பேட்ரியாட் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மற்றும் 992.4 மில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பட்ட துல்லியமாக அழிக்கும் ஆயுத அமைப்புகள் (APKWS) ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், குவைத்திற்கு 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு ஒருங்கிணைந்த போர் கட்டளை அமைப்பு மற்றும் இஸ்ரேலுக்கு 992.4 மில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பட்ட துல்லியமாக அழிக்கும் ஆயுத அமைப்புகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 147.6 மில்லியன் டாலருக்கு APKWS அமைப்பை விற்பனை செய்யவும் ஒப்புதல் அளித்தது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது. இதன் காரணமாக தற்போது வளைகுடா நாடுகள் அதிகளவிலான ஆயுதங்களை வாங்கத் தொடங்கியுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
Next Post
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பியங்கர ஜயரத்னவிற்கும் இலஞ்ச ஆணைக்குழு அழைப்பு

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பியங்கர ஜயரத்னவிற்கும் இலஞ்ச ஆணைக்குழு அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு