Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடல் உயிரினங்களை ஆயுதங்களாக மாற்றும் ஈரான்?

கடல் உயிரினங்களை ஆயுதங்களாக மாற்றும் ஈரான்?

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. அதேசமயம், உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டி நிலவி வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி மீதான அமெரிக்க முற்றுகை தொடர்வதால், அதை எதிர்கொள்ள ஈரான் தற்போது ஒரு அசாதாரணமான மற்றும் சர்ச்சைக்குரிய தந்திரத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்க்களத்தில் ஆச்சரியமூட்டும் தாக்குதல்களை நடத்துவதில் ஈரான் பெயர் பெற்றது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களைக் கருத்தில் கொள்வதற்கான ஒரு பரந்த முயற்சியாக இந்த அணுகுமுறை பார்க்கபடுகிறது என்று ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.

நீண்டகாலமாகத் தொடரும் இந்த முற்றுகையைத் தொடர்ந்து சகித்துக்கொள்வதை விட, மீண்டும் ஒரு மோதலில் ஈடுபடுவதே குறைவான இழப்பை ஏற்படுத்தும் என்று ஈரான் கருதுவதாக கூறப்படுகிறது. இராணுவப் பயிற்சி பெற்ற டால்பின்களைப் பயன்படுத்துவது குறித்து ஈரான் ஆராய்வது இது முதல் முறையல்ல. பிபிசி வெளியிட்ட தகவலின்படி 2000-ஆம் ஆண்டில் சோவியத் கடற்படையிடமிருந்து ஈரான் இத்தகைய விலங்குகளைப் பெற்றுக்கொண்டது.

அக்காலக்கட்டத்தில், தங்கள் முதுகில் பொருத்தப்பட்டிருக்கும் ஆயுதங்களைக் கொண்டு இலக்குகளைத் தாக்குவதற்கும், எதிரிக் கப்பல்கள் மீது தற்கொலைத் தாக்குதல் பாணியிலான (kamikaze-style) தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் அவை பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஹார்முஸ் நீரிணையில் நிலவும் தொடர் முற்றுகைக்கு மத்தியில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்ணிவெடிகளைச் சுமந்து செல்ல பயிற்சி பெற்ற டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
Next Post
மஹிந்த ராஜபக்ஸவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் எந்த அழைப்பும் வரவில்லையாம்

மஹிந்த ராஜபக்ஸவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் எந்த அழைப்பும் வரவில்லையாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.