Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேசன் பாஸ் தலைமையிலான குழுவினரால் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை

மேசன் பாஸ் தலைமையிலான குழுவினரால் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தெஹிவளை காலி வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில், அந்த வீட்டு வேலைகளுக்கு அடிக்கடி வந்து செல்லும் ‘சிவா’ என்ற மேசன் பாஸ் தலைமையிலான கும்பல், சுமார் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடந்த 3-ஆம் திகதி நீர்கொழும்பில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில், இந்த கொள்ளை பட்டப்பகலில் அரங்கேறியுள்ளது.

வீட்டின் மூலைமுடுக்குகளை நன்கு அறிந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த மேசன் பாஸ் (சிவா), இதனைத் திட்டமிட்டு நடத்தியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டார் திரும்பி வந்து பார்த்தபோது, நகைகளும் பணமும் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சுமார் 6 பெண்கள் அணியும் 27 பவுண் புதிய நகைகள் மற்றும் 3 பவுண் பழைய நகைகள் என மொத்தம் 30 பவுண் நகைகள்.

முக்கிய சூத்திரதாரியான மேசன் பாஸ் தற்போது தலைமறைவாகியுள்ளதோடு, அவரது மனைவி மற்றும் கூட்டாளிகள் சிலரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CCTV காட்சியில் நீல நிற டீ-ஷர்ட் அணிந்திருப்பவரே இந்த கொள்ளையின் பிரதான சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலைமறைவாக உள்ள நபர் குறித்தோ அல்லது படத்தில் காட்டப்பட்டுள்ள நகைகள் விற்பனைக்கு வருவது குறித்தோ தகவல் தெரிந்தால், உடனடியாகக் கீழ்வரும் எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும். தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படுவதுடன், தகுந்த சன்மானமும் வழங்கப்படும் எனவும் தொடர்புகளுக்கு: 0773547789 / 0770629240 என்ற தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
Next Post
மன அழுத்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான பொலிஸ் உத்தியோகத்தர்

மன அழுத்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான பொலிஸ் உத்தியோகத்தர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு