Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தி.மு.கவுடனான உறவை முறித்து தவெக உடன் இணைந்தது காங்கிரஸ்

தி.மு.கவுடனான உறவை முறித்து தவெக உடன் இணைந்தது காங்கிரஸ்

4 months ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, பல தசாப்தங்களாக தி.மு.க.வுடன் நீடித்து வந்த உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

மேலும், தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க.) வழங்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடிதம் ஒன்றை வௌியிட்டுள்ளது,

இம்முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் த.வெ.க.வை ஆதரிப்பதாக அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மதவாத சக்திகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் கூட்டணியில் அனுமதிக்கக் கூடாது என்ற முக்கிய நிபந்தனையுடன் இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கூட்டணியானது எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் இத்தகைய முடிவை எடுக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியான போதே, தி.மு.க. தரப்பிலிருந்து இதற்குக் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி அரசியல் நகர்வினால் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான சூழல் உறுதியாகியுள்ளதுடன், திராவிடக் கட்சிகளின் நீண்டகாலக் கூட்டணி அரசியலில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
Next Post
இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட வர்த்தகப் பண்ட வரி அதிகரித்தது

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட வர்த்தகப் பண்ட வரி அதிகரித்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு