Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழக மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்; கமல்ஹாசன்

விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழக மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்; கமல்ஹாசன்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.

எனது சகோதரர் மு.க. ஸ்டாலின், ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.

இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.

‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து தேர்தலை எதிர்கொண்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 5, பாமக 4, ஐயுஎம்எல் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, பாஜக 1, தேமுதிக 1, அமமுக 1 ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றள்ளன. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
Next Post
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டில் திருட்டு; இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டில் திருட்டு; இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு