Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடும் மழையினால் வெல்லாவெளி-மண்டூர் பாதை துண்டிக்கப்பட்டது – மாற்றுவழியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

கடும் மழையினால் வெல்லாவெளி-மண்டூர் பாதை துண்டிக்கப்பட்டது – மாற்றுவழியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

4 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் – வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வீதியை மூடிப் பாய்ந்ததுடன், தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த வீதியையும் முற்றாக உடைத்துச் சென்றுள்ளது.

வீதி உடைந்ததன் காரணமாக மண்டூர், வெல்லாவெளி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

வெல்லாவெளி மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் கடமைக்குச் செல்ல முடியாமல் வீதியோரத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள் பாதிப்பு, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக நகரப் பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலைமையேற்பட்டது.

மழைக்காலம் வருவதற்கு முன்பே பாலப் பணிகளை முடித்திருக்க வேண்டும் அல்லது வெள்ளத்தைத் தாங்கக்கூடிய வகையில் தற்காலிக வீதியை அமைத்திருக்க வேண்டும்” எனப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, உடைந்த வீதியைச் சீரமைக்க வேண்டும் அல்லது பொதுமக்களின் போக்குவரத்திற்காகப் பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 9, 2026
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி

September 9, 2026
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
செய்திகள்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!

September 9, 2026
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
Next Post
கற்பிட்டியில் கடற்படையின் அதிரடி வேட்டை; 622 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது!

கற்பிட்டியில் கடற்படையின் அதிரடி வேட்டை; 622 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு