இவ்வாண்டுக்கான புனித துல்ஹிஜ்ஜா மாதம் எதிர்வரும் மே 18 ஆம் திகதி ஆரம்பமாகலாம் என கத்தார் நாட்காட்டி மையம் (Qatar Calendar House) கணித்துள்ளது.
இதன்படி, மே 26 ஆம் திகதி அரபா தினமாகவும், மே 27 ஆம் திகதி ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் ஆரம்பமாகவும் வாய்ப்புள்ளதாக வானியல் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
எனினும், உத்தியோகபூர்வமான அறிவித்தல் பிறை தென்படுவதைப் பொறுத்தே அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








