Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அட்டாளைச்சேனையில் வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும்

அட்டாளைச்சேனையில் வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும்

4 months ago
in செய்திகள்

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி முன்பள்ளி மாணவர்களின் வாய் சுகாதாரம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் அட்டாளைச்சேனை றவ்ழத்துல் அத்பால் பாலர் பாடசாலையில் கடந்த (12) இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வானது அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுடீன் தலைமையில் இடம்பெற்றது.

‘வாயின் மகிழ்ச்சி வாழ்வின் மகிழ்ச்சி எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் யூ.ஹபீப் முஹம்மட் பிரதம அதிதியாகவும், நடமாடும் பல் வைத்திய நிபுணர் டொக்டர் எம்.எம்.பைறுஸ் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

ஹன்ழலத் பின் ஆமிர் ஜூம்ஆ பள்ளி தலைவர் மௌலவி எம்.ஏ.முபீன், அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் என்.கே.எம்.மிஸ்வர், மேற்பார்வை பாடசாலை பல் சிகிச்சையாளர் கே.ஜனலோஜினி, சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.பைறூஸ், பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எச்.பஹ்மி, பொதுச் சுகாதார மருத்துவ மாது திருமதி ஐ.றஹ்மத்தும்மா, பாடசாலை பல் சிகிச்சையாளர் திருமதி ஹசீனா சாதிக், எஸ்.எல்.மக்சூத் (PDO) உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பின்வரும் முக்கிய விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பற்சிதைவுத் தடுப்பு: மாணவர்களின் பற்களைப் பாதுகாப்பதற்கான ‘புளோரைட் வார்னிஷ்’ (Fluoride Varnish) சிகிச்சை வழங்கப்பட்டது.

செயல்முறை விளக்கம்: சரியான முறையில் பல் துலக்கும் நுட்பங்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் செயல்முறை ரீதியாக விளக்கப்பட்டது.

ஆரோக்கிய உணவு: பற்களின் உறுதிக்கும் வாய் ஆரோக்கியத்திற்கும் தேவையான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து வைத்தியர்களினால் விளக்கமளிக்கப்பட்டன.

முற்கூட்டிய கண்டறிதல்: வாய்வழி நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கும் முறைகள் குறித்து சுகாதார உத்தியோகத்தர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மாணவர்களுக்கான பல் பரிசோதனை உள்ளிட்ட வைத்தியர்களின் ஆலோசனைகள் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
பேராதனை பேராசிரியர் ஒருவருக்கு வாழ்நாள் தடை விதித்த உச்ச நீதிமன்றம்

பேராதனை பேராசிரியர் ஒருவருக்கு வாழ்நாள் தடை விதித்த உச்ச நீதிமன்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.