Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வட மாகாணத்தில் கனமழை; வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வட மாகாணத்தில் கனமழை; வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் வடக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு இன்றும் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் சில பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படக்கூடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மத்திய வங்காள விரிகுடாவில் உள்ள நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் கடந்த பல மணிநேரங்களாக குறிப்பிட்ட இடத்திலேயே நிலை கொண்டிருப்பதனால் இலங்கையை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழையுடனான வானிலை அடுத்த 48 மணி நேரத்திற்கு பின்னரே விலகும் வாய்ப்புள்ளது.

இதனால் இன்றும் இலங்கையின் வடக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, வட மத்திய கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் இம்மாவட்டங்களின் சில பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படக்கூடும்.

நாளைய தினமும்(15) வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாணம் பரவலாக கனமான மழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முல்லைத்தீவு,வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் நாளை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நாளை மறுதினமும் மேற்கு, வட மேற்கு, வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
Next Post
சிறையில் அடைக்கப்பட்டநபர்களுக்கு போதைப்பொருள் வைத்திருக்க அனுமதி வழங்கிய பொலிஸார் பணி இடைநீக்கம்

சிறையில் அடைக்கப்பட்டநபர்களுக்கு போதைப்பொருள் வைத்திருக்க அனுமதி வழங்கிய பொலிஸார் பணி இடைநீக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு