Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிகாரப்பகிர்வுக்கு தயார்-ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்க ஆதரவில்லை; மொட்டு திட்டவட்டம்

அதிகாரப்பகிர்வுக்கு தயார்-ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்க ஆதரவில்லை; மொட்டு திட்டவட்டம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப் பகிர்விலேயே எமக்கு உடன்பாடு உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு – கிழக்கில் தோல்வி உறுதியெனத் தெரிந்தும் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கத் தேர்தலை நடத்தினார்.

2017ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை ஊடாக மாகாண சபைத் தேர்தலைக் காலவரையறையின்றிப் பிற்போட மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் ஒத்துழைப்பு வழங்கின.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின்படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது நாட்டில் வீண் பிரச்சினைகளையே ஏற்படுத்தும். எனவே, இவ்விரு அதிகாரங்களைத் தவிர்த்து ஏனையவற்றைச் சகல மாகாணங்களுக்கும் பகிர்வதில் எமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

தேர்தல் முறைமை குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழு, நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலத்துக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை.

மாகாண சபைத் தேர்தலின் ஊடாக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் இறுதி நிலைப்பாடு என்றும் சாகர காரியவசம் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,025 இறக்குமதி வாகனங்கள் முடக்கம்; ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனைக்கு நடவடிக்கை
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,025 இறக்குமதி வாகனங்கள் முடக்கம்; ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனைக்கு நடவடிக்கை

July 26, 2026
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்
செய்திகள்

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்

July 26, 2026
கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு; பிரான்ஸுக்கு தப்பிய நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் கடும் தீர்ப்பு
செய்திகள்

கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு; பிரான்ஸுக்கு தப்பிய நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் கடும் தீர்ப்பு

July 26, 2026
அம்பாறையில் இரகசிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: முகாமையாளர் உட்பட இருவர் கைது
செய்திகள்

அம்பாறையில் இரகசிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: முகாமையாளர் உட்பட இருவர் கைது

July 26, 2026
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப்பயணித்த சூப்பர் லைன் பஸ் தன்னாமுனையில் விபத்து
செய்திகள்

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப்பயணித்த சூப்பர் லைன் பஸ் தன்னாமுனையில் விபத்து

July 26, 2026
பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
செய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

July 25, 2026
Next Post
பேனா போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

பேனா போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு