Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வனவாசல ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் விபரம்!

வனவாசல ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் விபரம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வனவாசல பகுதியில் ரயில் தடம் புரண்டதில் காயமடைந்தவர்களில் மேலும் மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக ரயில் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் நேற்றைய (16) தினமே சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மேலும் இருவர் இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன், தற்போது மேலும் மூவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் உள்ளனர். அதில் ஒருவர், தடம் புரண்ட ரயிலுக்கும் அதற்கு அருகில் இருந்த மோட்டார் ரதத்திற்கும் இடையில் சிக்கியே விபத்துக்குள்ளாகியுள்ளார். அவரது கையின் மூட்டுப் பகுதியில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அந்தப் பெண்ணுக்கு கழுத்தைத் திருப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் அவசரமாக வெளியேற முயன்றபோது ஏற்பட்ட நெரிசலே இதற்கு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு வழிமுறை ரயில்வே திணைக்களத்திடம் உள்ளது. எங்களிடம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு முறைமை ஒன்று காணப்படுகிறது. இதற்கு முன்னர் இருந்த முறையின்படி, மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்படும் பட்சத்தில் 105,000 ரூபாவே வழங்கப்படவிருந்தது. அது தற்போது 10 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாளைக்கு, ஒரு வாரம் வரை தலா 2,000 ரூபா வீதமும், அதற்கப்பால் 50,000 ரூபா வரையிலும் செலுத்துவதற்கான ஒரு வழிமுறையை நாம் உருவாக்கியுள்ளோம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு இழப்பீட்டு முறை காணப்படுகிறது. தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடுகளுக்குச் சென்றுள்ளவர்களின் மருத்துவ அறிக்கை அட்டைகளைப் பரிசீலித்து, இந்த இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இன்றைய தின மாலைக்குள் அந்தப் பகுதியின் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்து, நாளை முதல் ஆரம்பமாகும் புதிய வாரத்தில் வழமை போன்று ரயில்களை இயக்குவதற்கு தற்போது திட்டமிட்டுள்ளோம்.”

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்
செய்திகள்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

July 26, 2026
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை
செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை

July 26, 2026
Next Post
2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.