Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

2 months ago
in செய்திகள்

கண்டி, தெல்தெனிய பகுதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெல்தெனிய, பம்பரகல கோயிலுக்கு அருகாமையில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதிக்கு நேற்று(17) நான்கு இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, எதிர்பாராத விதமாக இளைஞர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

அங்கிருந்தவர்களின் முயற்சியால் ஒரு இளைஞர் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரும் நீருக்குள் மறைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, நீரில் மூழ்கிய மூவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் 18 முதல் 21 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் பெரும் சோகமாக, உயிரிழந்த மூவரில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஆழமான மற்றும் அபாயகரமான பகுதிகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் தொடர்ச்சியாக எச்சரித்து வரும் நிலையில், இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
Next Post
வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் வழங்கும் முறை தற்காலிக நிறுத்தம்

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் வழங்கும் முறை தற்காலிக நிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு