Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதுளையில் மாணவர்களிடையே மூளைக்காய்ச்சல் பரவல்

பதுளையில் மாணவர்களிடையே மூளைக்காய்ச்சல் பரவல்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பதுளை – வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது வெலிமடை ஆதார வைத்தியசாலையில் 10 மாணவர்களும், தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் 18 மாணவர்களும் என மொத்தம் 28 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு சிகிச்சை பெற்று வரும் 10 மாணவர்களில் நான்கு பேருக்கு மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளமை மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 14 வயதிற்குட்பட்ட ஐந்து சிறுவர்களும், ஐந்து மாணவர்களும் அடங்குவர்.

இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 18 மாணவர்களில் 10 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனைய மாணவர்களுக்கும் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான முடிவுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காய்ச்சல் மற்றும் கடுமையான தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் தடிப்புகள் அல்லது கொப்புளங்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அல்லது பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நோய் பரவுவதைத் தடுக்கும் முகமாகப் பொதுமக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிதல், கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி கைகளைத் அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் மற்றும் முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பேணுவதோடு, அதிக மக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களைத் தவிர்த்தல் போன்ற சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
Next Post
புத்தளம் – கொழும்பு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது; சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது; சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு