Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு!

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு!

3 months ago
in செய்திகள்

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை உள்வாங்கும் போட்டிப் பரீட்சை 2023 (2026) நேற்று (24) நடைபெற்றது.

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கும் இந்த போட்டிப் பரீட்சையானது நாடு முழுவதும் 1,048 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றிருந்ததாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இப்பரீட்சைக்காக அரச சேவையிலுள்ள 66,991 விண்ணப்பதாரர்களும், ஏனைய பிரிவைச் சேர்ந்த 96,442 விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்திருந்ததுடன், விசேட தேவையுடைய 323 விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வசதிகளையும் பரீட்சைகள் திணைக்களம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

முன்னதாக 2023 ஆம் ஆண்டில், அரச சேவையிலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சையொன்றை நடத்துவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டிருந்தது.

எனினும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த ஒரு வழக்கு ஆகியன காரணமாகக் குறித்த பரீட்சை நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது அனைத்து வழக்கு நடவடிக்கைகளும் நிறைவடைந்திருப்பதையடுத்து, நாடு முழுவதும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குத் தீர்வை வழங்கும் நோக்கில், அரச சேவையிலுள்ள பட்டதாரிகளும் ஏனைய பட்டதாரிகளும் தோற்றக்கூடிய வகையில் இம்முறை பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
Next Post
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி றிஸ்வான் இடைநிறுத்தம்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி றிஸ்வான் இடைநிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு