Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சேவை நோக்கம் என கூறி பல இலட்சம் மோசடி சிரந்தி ராஜபக்சவை கண்டு அஞ்சும் அதிகாரிகள்!

சேவை நோக்கம் என கூறி பல இலட்சம் மோசடி சிரந்தி ராஜபக்சவை கண்டு அஞ்சும் அதிகாரிகள்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக் கொண்டதில் அரசாங்கத்திற்கு பல இலட்சத்திற்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளன.

குறித்த செய்திகளில் வெளிவந்ததாவது,

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு உரித்தான இந்த கட்டடத்தின் 65 எண் கட்டடம் 1999 ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு பெற்று கொள்ளப்பட்டுள்ளது. அன்று ஒரு மாதத்துக்கான கட்டணமாக 3000 ரூபாவே அறவிடப்பட்டுள்ளது.

குறித்த கார்ல்டன் பாலர் பாடசாலை இலாப நோக்கமற்று சேவை நோக்கத்தில் நடத்தி செல்வதாக தெரிவித்தே குறைந்த விலைக்கு குறித்த கட்டடம் வாங்கப்பட்டுள்ளது.

ஆனால் கார்ல்டன் பாலர் பாடசாலை கட்டணம் அறவிடப்படும் தனியார் பாலர் பாடசாலையாகும். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு அவ்வாறான ஒரு ஒப்பந்தத்தில் கட்டடத்தை வழங்க முடியாது.

ஆனாலும் சேவை நோக்கம் கருதி இரு பகுதியினரும் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். பாலர் பாடசாலைக்கு கொடுக்கப்பட்ட கட்டடம் 65 எண் கொண்ட பகுதி மட்டுமாகும்.ஆனால் எண் 75-76 கட்டடங்களும் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டடத்தை உடைத்து திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது.

அரசாங்க கட்டடத்தை உடைத்து திருத்தி அமைத்தல் சட்டவிரோத செயலாகும் அதற்கும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள இந்த பாலர் பாடசாலை கட்டடம் 2018 சந்தை மதிபீட்டின் படி ஒரு மாதத்திற்கான குத்தகை 177,000 ரூபாவாகும்.

ஆனாலும் 30,000 ரூபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு புதிக்கப்பட்டு 2028 ஆம் ஆண்டுவரை ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் 54 இலட்சத்துக்கு மேல் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.

கோப் குழுவில் குறித்த கார்ல்டன் பாலர் பாடசாலை யாருடைய பெயரில் உள்ளது என கோட்டபோதும் தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் பெயரை சொல்ல தயங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த அதிகாரிகள் ஆவணங்கள் ஏதும் கொண்டுவரவில்லை என தெரிவித்துள்ளனர்.இந்த மோசடி தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என கோப் குழுத் தலைவர் அறிவித்துள்ளார். என்றுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
Next Post
வாக்குமூலம் வழங்க சென்ற விமல் வீரவன்ச கைது

வாக்குமூலம் வழங்க சென்ற விமல் வீரவன்ச கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு