Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருக்கள்மடம் மனித புதைகுழியின் இறுதி அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

குருக்கள்மடம் மனித புதைகுழியின் இறுதி அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்றைய தினம் (26) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைந்துள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் ஸ்கேன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றின் உத்தரவிற்கு அமைவாக, பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இந்தப் புதைகுழிப் பகுதியில் நவீன தொழில்நுட்பமான ‘ஆடியோ ஃப்ரீக்வன்சி மேக்னடோ டெல்லூரிக்’ முறைமையைப் பயன்படுத்தி ஸ்கேனிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த ஆய்வின் அடிப்படையிலான இறுதி அறிக்கையே இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஆராய்ந்த கௌரவ நீதிமன்றம், இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதுடன், அன்றைய தினம் திறந்த நீதிமன்றில் இவ்வழக்கினை மீண்டும் அழைப்பதற்கான கட்டளையையும் பிறப்பித்துள்ளது.

1990ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டுவந்தவர்கள் குருக்கள்மடம் பகுதியில் ஆயுததாரிகளினால் மறிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டு கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக குரலற்றவர்கள் அமைப்பு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் தொடர்ந்து அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு எந்தவித சான்று பொருட்களும் மீட்கப்பட்டாத நிலையில் வழக்காளிகளின் சொந்த செலவில் ஸ்கன் செய்வற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

ஆதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் வழக்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
சர்வதேசச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ‘எல்டோ தர்மே’ குடும்பத்துடன் டுபாயில் கைது!

சர்வதேசச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர் 'எல்டோ தர்மே' குடும்பத்துடன் டுபாயில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.