Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலையை முடித்து துறவறம் பூணுவதற்காக விகாரைக்கு வந்த 14 வயது சிறுவனை, அவர் வந்த முதல் நாளிலேயே கடுமையான முறையில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட தேரர் ஒருவருக்கு, 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து அனுராதபுரம் சிறுவர் குற்றங்கள் தொடர்பான விசேட மேல் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான இன்று (27) தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வாறு கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் தம்புத்தேகம, ஹுரிகஸ்வெவ, தலாகொல வெவ விகாரையின் விகாராதிபதி முல்லேரியாவே விமலதிஸ்ஸ என்ற 65 வயதுடைய தேரர் ஆவார்.

பாதிக்கப்பட்ட மைனர் சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபாய் பணத்தை இழப்பீடாக வழங்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதியான தேரருக்கு உத்தரவிட்டார்.

இந்த இழப்பீட்டுத் தொகையை செலுத்தத் தவறினால், பிரதிவாதியான தேரருக்கு மேலும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகள்: பிரதிவாதியான விகாராதிபதிக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அந்த 3 குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, பிரதிவாதியான தேரருக்கு முதலாவது குற்றச்சாட்டுக்காக 5,000 ரூபாயும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றச்சாட்டுகளுக்கு தலா 15,000 ரூபாயும் அபராதம் விதித்து விசேட மேல் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான உத்தரவிட்டார்.

இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், 3 குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக மேலும் தலா 4 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வடக்கு காணிகள் விடுவிக்கப்படும்; பாதுகாப்புப் பிரதி அமைச்சர்

தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வடக்கு காணிகள் விடுவிக்கப்படும்; பாதுகாப்புப் பிரதி அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு